இந்தியா: தமிழ்நாடு

2000 ரூபாய் நோட்டு என்னிடமும் இல்லை, நடுத்தர மனிதரிடமும் இல்லை. பேங்க் வாசலில் யாருமே போய் நிற்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது...

ரிசர்வ் வங்கியின் கூற்றுபடி 100 ரூபாய் நோட்டுகளில் 10 ரூபாய்கள் தான் ரூ 2000, மீதமுள்ள 90 நோட்டுகள் மற்ற டினோமினேஷன்கள். 2018 இல் புழக்கத்தில் இருந்த 100 நோட்டுகளில் 36 நோட்டுகள் மட்டுமே ரூ 2000 நோட்டுகளாகும்.
 
இன்றைய தினம் ரூ 2000 புழக்கத்தில் இல்லை. இதை வைத்திருப்பவர்கள் பதுக்கி வைத்திருக்க வேண்டும். லஞ்சம் வாங்கியவர்கள், அரசியல்வாதிகள், அந்த பணத்தை கட்டுகட்டாக குடோன்களில் வைத்திருப்போர்கள் உள்ளிட்டோருக்கு பிரச்சினை வரத்தான் போகிறது.

அதனால்தான் நிதியமைச்சரிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளோம். அதாவது டாஸ்மாக், கூட்டுறவு சொசைட்டிகள், மின்சார கட்டணம் கட்டும் இடத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு காரணம் இந்த 3 இடத்தில்தான் ஒரே அமைச்சர் இருக்கிறார். பிரச்சினை அவருக்குத்தானே ஒழிய சாமானிய மக்களுக்கு இல்லை.

எங்காவது வங்கி வாசலில் வரிசையாக மக்கள் நின்றிருப்பதை கண்டீர்களா. வங்கி வாசலில் நடுத்தர மக்கள் யாராவது ரூ 2000 காசை மாற்ற வந்திருக்கிறார்களா என்றால் யாருமில்லை. என்னை உள்ளிட்ட யாருமே வங்கிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. வங்கிகளில் ஒரு நாளைக்கு ரூ 20000 மதிப்பிலான ரூ 2000 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும்.

கேஒய்சி இல்லாமல் வங்கியில் ரூ 2000 நோட்டுகளை மாற்ற முடியாது. இதை கருத்தில் கொள்ள வேண்டும் என நாங்கள் எடுத்துச் சொல்லியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.