களனி பல்கலைக்கழகத்தில் 18ஆம் திகதி இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதன்போது, அவர்கள் தலா 5 இலட்சம் ரூபா வீதமான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மாதத்திற்கு ஒரு முறை கிரிபத்கொடை பொலிஸ் நிலையில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.