இந்தியா: தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது....

தமிழக சட்டமன்றத்தில் பேச்சுரிமை இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று அதிமுகவில் வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. சட்டமன்றத்தில் 62 -க்கும் மேற்பட்ட பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் அதரவு இருக்கும் பட்சத்தில் யாருக்கு எதிரக்கட்சி துணைத்தலைவர் பதவி கொடுக்க வேண்டும்.

ஓபிஎஸ்க்கு எதிர்க்கட்சி துணைத்தலைவராக நீடிக்க என்ன தகுதி இருக்கிறது? என்ன முகாந்திரம் இருக்கிறது? முகாந்திரம் கொஞ்சம் கூட இல்லை.

ஓ பன்னீர் செல்வம் தனது மாநாட்டிற்கு யாரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
 
அவருக்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் இருக்கிறது. ஒரு 200 கோடி ரூபாய் செலவு செய்தால் நீங்கள் கூட 2 லட்சம் பேரை கூட்டி விடலாம். பணம் பாதாளம் வரை பாயும். ஓ பன்னீர் செல்வத்திற்கு இருக்கும் கருப்பு பணம் எல்லாம் இப்போது வெளிவருகிறது.

அவருடைய கருப்பு பணம்தான் மக்களிடம் சேரப்போகிறது. ஓ பன்னீர் செல்வத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியதை கிடப்பில் போட்டுள்ளது. அதை தூசு தட்டட்டும். அவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது, தமிழ்நட்டில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது, தேனி மாவட்டத்தில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது, என்பதையெல்லாம் திமுக தோண்டி எடுத்து சொல்லட்டும். ஆனால் சொல்ல மாட்டார்கள் இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.