வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரி அருகே கரையை கடந்துவிட்டது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

 

புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 மணி முதல் 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது.

 

100 சதவீதம் பாதுகாப்புடன் புயலை கடந்திருக்கிறோம் என்றார்.