இந்தியா: தமிழ்நாடு

அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி மற்றும், ஓ பன்னீர்செல்வம் அணியினர் இடையே மோதல் போக்கு நிலவி வருகின்ற நிலையில் தமிழ்நாடு சட்டசபையிலும் நேற்றைய தினம் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய தினம் சட்டசபையில் இபிஎஸ் அருகேதான் ஓபிஎஸ் பாராமுகமாகவே அமர்ந்திருந்தார்.

முக்கியமான விவாதங்களில் இபிஎஸ், ஓபிஎஸ் இவருமே பேசினார்கள்.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீது நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதன்பின்னர் ஓபிஎஸ் பேசினார். அவ்வளவுதான் இபிஎஸ் கொந்தளித்துவிட்டார்.

அதெப்படி பெரும்பான்மை உறுப்பினர்கள் அடிப்படையில் அதிமுகவில் ஒருவரைத்தானே பேச அனுமதிக்க வேண்டும் என்றார். ஆனால் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் என்ற முறையில் ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார். அப்போது மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக முழக்கமிட அதிமுக எம்.எல்.ஏக்கள் அவருடன் மல்லுக்கட்டினர்.

அப்போது கேபி முனுசாமி குறுக்கிட்டு சமாதானப்படுத்தினார்.

சபாநாயகர் அப்பாவுவின் விளக்கத்தை ஏற்க மறுத்த
அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர்.

இனிவரும் நாட்களிலும் 9ம் சட்டசபையிலும் அதிமுக இபிஎஸ், கோஷ்டிகள் யுத்தம் தொடரும் என்பதற்கான முன்னோட்டமே இன்றைய சர்ச்சையும் வெளிநடப்பும் எனவும் கூறப்படுகிறது.

நீதிமன்றங்களில் இரு கோஷ்டிகளின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தாலும் சட்டசபையில் அங்கீகாரம் பெறுவதில் இரு அணிகளும் தொடர்ந்து முட்டி மோதவே போகிறது என்பதையே நேற்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.