லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 'லியோ' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சஞ்சய் தத் 'லியோ' படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

இதனை புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ள படக்குழு பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது...

"நன்றி சஞ்சய் தத் சார், நீங்கள் மிகவும் இனிமையாக இருந்தீர்கள். எங்கள் படக்குழுவினர் உங்கள் நடிப்பை அருகில் பார்த்து மகிழ்ந்தார்கள். எப்போதும் போல் நீங்கள் சிறப்பாக நடித்தீர்கள். உங்களை சென்னை படப்பிடிப்பில் சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.