Breaking News

ஆஸ்கார் விருதால் அடித்த அதிர்ஷ்டம் - ஹாலிவுட் படத்தில் நடிகர் ராம்சரண்...!!

ஆஸ்கார் விருதால் அடித்த அதிர்ஷ்டம் - ஹாலிவுட் படத்தில் நடிகர் ராம்சரண்...!!

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த 'ஆர் ஆர் ஆர்' படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

ஆர் ஆர் ஆர் படத்தில் ராம்சரணின் சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக பலரும் பாராட்டினர். இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராம்சரணுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.

இதுகுறித்து ராம்சரண் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது...

எனக்கு ஹாலிவுட் படங்கள் மிகவும் பிடிக்கும். ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் நடிகை கேட் பிளான்செட் ஆகியோரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் ஆஸ்கார் விழாவுக்கு சென்றேன். சிறுவயது முதலே நான் ஹாலிவுட் நடிகர் நடிகைகளை பார்த்தே வளர்ந்தேன். டாம் குரூஸ் அற்புதமான நடிகர்.

பல சர்வதேச திரைப்படங்களை ஹாலிவுட் வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் சில ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.

ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது‌ என்றார்.