தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் படப்பிடிப்பு இடைவெளியின் போது பைக்கில் பயணிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்து பல்வேறு பகுதிகளுக்கு தனது உயர் ரக இரு சக்கர வாகனத்தில் சென்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை உத்தம சோழபுரம் அருகே நடிகர் அஜித் உயர் ரக பைக் ஓட்டி சென்றதை ரசிகர்கள் பார்த்து உற்சாகமடைந்தனர்.

அப்போது அவர் பைக்கை நிறுத்தி விட்டு ரசிகர்களிடம் சகஜமாக உரையாடினார். மேலும் அங்கிருந்தவர்களுக்கு கையசைத்தவாறு அஜித் பயணித்தார். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.