'வண்ணாரப்பேட்டை' , 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'.

இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார்.

'பகாசூரன்' திரைப்படம் கடந்த பெப்ரவரி 17-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், 'பகாசூரன்' திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.