மக்களின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தன்னிடம் தெரிவித்ததாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மார்ச் 9ஆம் திகதி முதல் 21 நாட்களுக்குப் பின்னர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ஆணைக்குழு தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ராஜகிரியில் உள்ள தேர்தல் தலைமைச் செயலகம் முன்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.