வைகாடோ மாவட்டத்தின் அழகு நிறைந்த இடமான Raglan சீரற்ற வானிலை‌ காரணமாக பலத்த சேதத்தை சந்தித்தது.

இந்நிலையில் வைகாடோ மாவட்டத்தின் அவசரகால செயல்பாட்டு மையக் கட்டுப்பாட்டாளர் கர்ட் அபோட் இது குறித்து கூறுகையில், Raglan சேதத்தின் அளவைக் கண்டறிய பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என கூறினார்.

“வடக்கிலிருந்து Ruapuke கடற்கரையை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் Whaanga சாலை, மண்சரிவுகள் மற்றும் பெரிய மரம் விழுந்ததால் மூடப்பட்டுள்ளது.

அவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு நாங்கள் இன்னும் பணியாற்றி வருகிறோம்.

வைகாடோ மாவட்டத்தில் மற்ற இடங்களில், சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு தொடர்கிறது என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பெரும்பாலான சேதங்கள் பிராந்தியத்தின் வடக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளன என்று வைகாடோ மாவட்ட கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 31 செவ்வாய்க்கிழமை முதல், ஐந்து இடங்களில் சாலைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் Miranda மற்றும் Findlay சாலைகள், Tuakau விற்கு அருகிலுள்ள Murray சாலை, Raglan இற்கு தெற்கே Whaanga சாலை, Raglan இற்கு அருகிலுள்ள Te Papatapu சாலை மற்றும் Port Waikato வில் உள்ள Waikaretu சாலை, ஆகியவற்றில் பாரிய பள்ளங்கள் ஏற்பட்டன.

மேலும் Glentui Lane இற்கு மேற்கே உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மாநில நெடுஞ்சாலை 23 (SH23) இரவு 7 மணி முதல் மூடப்படும் என Waka Kotahi NZ Transport Agency நேற்று மாலை (01) அறிவுறுத்தியது.

Waka Kotahi சிஸ்டம் மேலாளர் கூறுகையில்...

இந்த சாலையை திறந்து வைக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். இருந்தபோதிலும் சாலையில் பிளவுகள் வளர்ந்து வருகின்றன.

பொதுமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, Waka Kotahi  இன்று இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை Glentui இல் உள்ள மாநில நெடுஞ்சாலை 23 ஐ மூடிவிட்டு நாளை காலை முதல் அவற்றை மறு மதிப்பீடு செய்யும் என அவர் தெரிவித்தார்.

Raglan இல் உள்ள உள்ளூர் மக்களுக்கு நெடுஞ்சாலை எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரைவாக செயல்படுவதே எங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Thanks for the news : Indian Newslink