இலங்கை

18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.