நீதியமைச்சர் அலி சப்ரி நாட்டு தலைவர் அல்ல. இவர் வரையறைகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும். பௌத்த மத உரிமை சட்டங்களில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பெரும்பான்மை மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு.

நீதியமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் அடிப்படைவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது நீதியமைச்சர் பதவியிலிருந்து இவரை நீக்க வேண்டும். இல்லாவிடின் இவராலேயே இந்த அரசாங்கம் பலவீனமடையும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

மேலும் ,பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பௌத்த மத கல்வி எவ்விடத்திலும் அடிப்படைவாதத்தையும் பிற மதங்களை அழிக்க வேண்டும் என்றும் போதிக்கவில்லை. பௌத்த மத கொள்கையினை கொண்டுள்ள நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்கவில்லை. இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் கிடையாது. ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் உள்ளது என்றும் தெரிவித்தார்.