சிம்புத்தேவன் இயக்கும் சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பது உறுதியாகியுள்ளது.

சிம்புத்தேவன் இயக்கத்தில் வடிவேலு, நாசர், மனோராமா உள்ளிட்டோர் நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி சரித்தர படம் 2006 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கியபோது தகராறு செய்து வடிவேலு விலகியதால் படம் நின்று போனது.

இந்நிலையில் தற்போது யோகிபாபு நடிக்கும் படத்தை இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி சாயலில் நகைச்சுவை கதையம்சம் கொண்ட ராஜா காலத்து சரித்திர படமாக சிம்புத்தேவன் எடுக்கிறார்.

கசட தபற, விக்டிம் படங்களுக்கு பிறகு சிம்புத்தேவன் இந்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.