அமைச்சர் விமல் வீரவங்ந மீது குண்டு வீசத் தயாராகி வருவதாகக் கூறி 119 பொலிஸ் அவசரநிலை பதிலளிப்பு மையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பு குறித்து வெள்ளவத்தை காவல்துறை சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது.

வால்வெட்டித்துரையைச் சேர்ந்த சுதர்சன் எனும் நபரினால் குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 12 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் 119 பொலிஸ் அவசர அழைப்பு மையத்திலிருந்து வெள்ளவத்தை பொலிசாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பில் இருந்து தெரிய வந்துள்ளது..

இலக்கம் 275, ஜோசப் ஸ்டான்லி வீதி, வெள்ளவத்தை வீட்டில் வசிக்கிம் அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு இவ்வாறு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளவிருப்பதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிசார் விசாரணை நடத்தியபோது, ​​வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் அத்தகைய முகவரி எதுவும் இல்லை என்பதும், அமைச்சர் விமல் வீரவங்ச அத்தகைய பகுதியில் வசிக்கவில்லை என்பதும் மேலும் தெரியவந்தது.

வெள்ளவத்தை பொலிஸ் குற்றப்பிரிவின் OIC அந்த எண்ணுக்கு திருப்பி அழைப்பினை மேற்கொண்டதாகவும், அழைப்புக்கு பதிலளித்த நபர் பொலிஸ் அதிகாரியை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து, தொலைபேசி எண் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி நிறுவனத்திடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்ற பின்னர், சிம் கார்டின் உரிமையாளர் திவலபத்தன பொலிஸ் பிரிவில் கொட்டகலை பிரதேசத்தில் வசிப்பவர் என்பது விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதோடு, கடந்த ஜனவரி 13 ம் திகதி தனது தொலைப்பேசி காணாமற் சென்றுள்ளதாகவும் குறித்த நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த நபர் தொலைபேசி காணாமற் சென்றதி தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யவில்லை என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைக்காக குறித்த நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.