கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின் வீட்டிலிருந்து தப்பியோடிய நிமேஷ் மதுசங்க எனும் 22 வயதுடைய இளைஞன் அப்பிரதேசத்திலேயே ஒரு வீட்டினுள் இருந்த போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி குறித்த நபர் கொவிட்-19 தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பாிசோதனைகளின் முடிவுகள் பெறப்படும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக காவல் துறை தொிவித்துள்ளது.

எவ்வாறெனினும் இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பே இவர் வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்.

.......................................................................................................................................................................................................................................................

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட சப்புகஸ்கந்த - மாகொல வடக்கு தேவாலய வீதி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வீடு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவருக்கு மேற்கொண்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றியமை உறுதியாகியது.

இதன்படி அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வீட்டிற்கு சென்ற போது அவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற இளைஞனை கைது செய்வதற்கு பொது மக்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

தப்பி சென்ற இளைஞன் 22 வயதுடையவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது பெயர் நிமேஷ் மதுஷங்க என அவர் கூறியுள்ளார்.

மேலும் ,இந்த இளைஞர் தொடர்பில் தகவல் அறிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.