மொஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்திலுள்ள, அதிர்ஷ்டத்தை தரும் என நம்பப்படும் வெண்கலத்திலான நாய் சிலையை கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக பயணிகள் தொடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி 1917ம் ஆண்டு புரட்சி முதல் 1937ம் ஆண்டு வரையிலான சம்பவங்களை நினைவுகூறும் வகையில் சுமார் 20 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

 

அதில் துப்பாக்கியுடன் முழங்காலிட்டு அமர்ந்திருக்கும் வீரனின் சிலை அருகே குறித்த நாயின் சிலையுள்ளது.

 

மேலும் ,அதன் மூக்கு பகுதியை தொட்டால் அதிர்ஷ்டம் என நம்பி, பலர் அதை தொட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் கொரோனாத் தொற்றுப் பரவும் அபாயம் இருப்பதால், சிலையை தொடக் கூடாதென எச்சரிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.