ஆஸ்திரேலியாவில் காப்டர் பேக் எனப்படும் மனிதர்கள் பறக்க உதவும் சாதனத்தின் சோதனை முயற்சி வெற்றியடைந்துள்ளது.

ஹெலிகாப்டரில் பயன்படும் மோட்டார் மற்றும் விசிறி போன்ற ரோட்டர் அமைப்புகளுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பறக்கும் இயந்திரம் குறித்து சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.

தற்போது கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் காப்டர் பேக் இயக்கியவரை குறிப்பிட்ட உயரத்திற்கு எடுத்துச் சென்றது. அசம்பாவிதம் ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழும் நிலை ஏற்பட்டால், அதிலிருக்கும் பாராசூட் உடனடியாக விரிந்து உயிரை காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.