யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலையகத்திற்கான விஜயத்தின் போது ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

விஜயத்தின் போது மேற்படி ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டதோடு, விவரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, இந்திய வீடமைப்பு திட்டத்தை பற்றி மக்களுக்கு எடுத்துகூறியதுடன், எதிர்வரும் காலங்களில் பத்தாயிரம் இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் தொடர்பிலும் மக்களிடம் தெளிவுப்படுத்தினார். இதன்போது, இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரனுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.