பிரான்சை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 48, 400 பேரிடம் ஆய்வு நடத்தியது.இந்த ஆயவில் உடல் உழைப்பு இன்றி உட்கார்ந்துக் கொண்டிருப்பதையே பழக்கமாக கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அது உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக 47 வயது மதிக்கத்தவர்களிடம் நடத்திய இந்த ஆய்வில், 2 ஆண்டுகளுக்கு மேலாக போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருந்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோனோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் அளவிற்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

புகைபிடித்தல், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுடன் ஒப்பிடும் போது, உடல் உழைப்பின்றி உட்கார்ந்தே உள்ளவர்களுக்கு கொரோனா அதிக தாக்கத்தை ஏற்படும் என்றும் ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.