இலங்கை

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இலங்கையில் மோட்டார் வாகனங்களின் பதிவு 23.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியின் அறிக்கையின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் 19,218 வாகனங்களும், 2023ஆம் ஆண்டில் 23698 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மோட்டார்சைக்கிள்களின் பதிவும் அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் மோட்டர்சைக்கிள் பதிவுகள் 8363ஆக இருந்துள்ள நிலையில் இது கடந்த ஆண்டு 16,869ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த வருடம் 636 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.