பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது  ஆட்சியை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரைத் தாக்கியுள்ள புற்றுநோய், எதிர்பார்த்ததைவிட அதிக ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்,

இந்நிலையில், அடுத்து அரியணையில் அமரப்போகின்றவரை தற்போதே முடிவு செய்யும் ஒரு கட்டாய நிலை பிரித்தானிய ராஜ குடும்பத்திற்கு உருவாகியுள்ளது .

அடுத்து இளவரசர் வில்லியம்தான் மன்னராக வேண்டுமென மன்னர் சார்லஸ் விரும்புவதாக கருதப்படுகிறது என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் மீண்டும் அரியணையேறும் வரிசையில் அடுத்ததாக இளவரசர் வில்லியம் காணப்படுகின்றார்.

இதன்படி மன்னர் சார்லசுடைய உடல் நிலை மோசமாகும் முன், அடுத்து மன்னராகப்போவது யார், யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள் என முடிவு செய்தாக வேண்டிய கட்டாய நிலைக்கு அரச குடும்பம் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கான திட்டமிடுதலில் இளவரசர் ஹரியை சேர்க்கக்கூடாது என்பதில் இளவரசர் வில்லியம் உறுதியாக இருப்பதாக  பிரித்தானிய செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், 2020ஆம் ஆண்டு மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களாக பணியாற்றும் பொறுப்பிலிருந்து வெளியேறிவிட்டதன் காரணமாக குறித்த நிலைப்பாடு உருவாகியுள்ளது

மேலும், பொறுப்பிலிருந்து விலகியவர்களை, அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான திட்டமிடுதலில் சேர்க்கக்கூடாதென இளவரசர் வில்லியமின் கருத்து அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.