நைஜீரியாவில் 200ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களைக் ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நைஜீரியாவின் ஒரு பள்ளியில் இடம்பெற்ற மிகப்பெரிய கடத்தல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது. இந்நிலையில் கடத்தப்பட்டவர்களில்  இரண்டாம் நிலைப் பிரிவில் இருந்து 187 பேரும், முதன்மைப் பிரிவில் இருந்து 40 மாணர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஆயுததாரிகள் 100 ஆரம்பக் கல்வி மாணவர்களை அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அவர்களை விடுவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரே இரண்டாம் மற்றும் முதன்மைப்பிரிவு மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மாணவர்களை பாதுகாப்பாக மீட்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை நைஜீரிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.