இலங்கை

மைக்ரோசாப்டின் ஆதரவுடன், இலங்கையின் கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவு பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சர்வதேச பாடத்திட்டம் தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்டு, தேவையான அடிப்படை மனித வளம் உள்ள பாடசாலைகளில் எட்டாம் வகுப்பிலிருந்து முன்மொழியப்பட்ட முன்னோடித் திட்டம் தொடங்கப்படும்.

இதற்கமைய, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளின் கீழ் முன்னோடி திட்டம் டிஜிட்டல் மயமாக்கப்படும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப பாடத்தை கற்பிக்கும் 100 ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் மூலம் பயிற்சியாளர்களாக பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்படத்தக்கது.