"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் தமிழுக்குக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"- என்று பாரதி தமிழ் மக்களை அழைத்தார் நூறாண்டுகளுக்கு முன்பே!

உள்ளூர்களில், உள்நாடுகளில் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற தொழிலும், விவசாயமும், வர்த்தகமும், போக்குவரத்தும், தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் இன்று உலகளாவிய வாணிக வர்த்தமாக மாற தமிழர்கள் மிக முக்கியக் காரணம்! இதோ இங்கே ஓர் எடுத்துக்காட்டு-


வடமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து உலக அளவிலான தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மாபெரும் தொழில் முனைவோர் மாநாடு கடந்த 19 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. மாநாட்டினை கைலாசபதி கலையரங்கில் நடத்தியது.

இதில் வடமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் திரு பாலா சுவாமிநாதன், முன்னால் தலைவர் திரு கால்டுவெல் வேல்நம்பி, FITEN அம்மப்பின் தலைவர் திரு கௌதம் ராஜன், ஒருங்கிணப்பாளர்களான திரு ஷான் நந்தக்குமார், திரு பார்த்தீபன் பரஞ்சோதி, Yarl IT Hub ன் ஒருங்கிணப்பாளர் திரு சயந்தன் மற்றும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீ சற்குணராஜா மற்றும் UBL இயக்குனரான ஈஸ்வரமோகன், அமெரிக்கத் தொழில் அதிபர் திரு ராஜ் ராஜரத்தினம் மற்றும் சிறு தொழில் முனைவோர் இவர்களோடு நிறைய மாணவர்களும் கலந்து கொண்டனர். 

2024 இவ்வருடம் இப்பேரவையின் 37 வது தமிழ்விழா, டெக்சாஸ்,சான் ஆண்டோனியோவில் நடைபெறவிருப்பதால் இதன் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு செல்வகிரி மற்றும் திட்டமிடல் குழுவின் உறுப்பினர் திரு இராஜகுரு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உலகளாவிய வணிக சந்தை, உற்பத்தி மற்றும் விற்பனைகளுக்கு மாபெரும் வியாபாரக் கதவினை திறந்து வைக்க முயற்சிகளும், வெற்றி பெற்ற தொழிலதிபர்களின் ஆலோசனைகளும், தொழில்நுட்பப் பகிர்தலும் என களைகட்டியது இம்மாநாடு!
இதனையொட்டிய புகைப்படங்கள்-

      

எமது நிருபர் ⁃ ஷீலா ரமணன்