இலங்கை

கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றச் செயல்களை செய்துவிட்டு தப்பிச்செல்லும் நபர்களை இனங்கண்டுக்கொள்வதற்காக முகத்தை அடையாளம் காணும் அதிநவீன தொழில்நுட்பத்தை நிலை நிறுத்தியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று இதனை அறிவித்துள்ளார்.

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கடுமையான குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச்செல்லும் குற்றவாளிகளை அடையாளம் காண இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முக அடையாளம் காணும் மென்பொருள் இதனையடுத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்ட 1,092 நபர்களின் படங்களை அதிகாரிகள் அமைப்பில் பதிவேற்றியுள்ளனர்.

“இந்த மேம்பட்ட முக அடையாளம் காணும் மென்பொருள், கண்காணிப்பு பட்டியலில் உள்ள எவரையும், அவர்கள் மாறுவேடமிட முயன்றாலும், தானாகவே கண்டறியும்” எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.