நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்திருந்த படம், சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத் போன்ற கவனத்தை ஈர்க்கும் படங்களை அளித்த எஸ்.யு அருண்குமார் இந்த படத்தையும் இயக்கியிருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் சேர்ந்து வேறு சில புதுப்படங்களும் வெளியானதால், இந்த படம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனாலும், சித்தா படத்தை பார்த்தவர்கள் நல்ல விமர்சனத்தையே கொடுத்துவந்தனர். இப்படத்துடன் வெளியான பிற படைப்புகள் ஓடிடியில் வெளியாகி விட்டன. ஆனால் சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு மட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 17ஆம் திகதி வெளியானது. அப்போது படத்தைப் பார்த்த பலர் உண்மையில் சித்தா படம் ஒரு நல்ல படம் என்று புகழ்ந்தனர்.

தற்போது நயன்தாரா சித்தார்த்துடன் இணைந்து டெஸ்ட் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், சித்தா படம் குறித்து பேசி உள்ள அவர், 2023 ஆம் ஆண்டு வெளியான சிறந்த படங்களில் சித்தா திரைப்படமும் ஒன்று. சித்தார்த் இது உங்களுடைய படங்களிலேயே மிகச் சிறந்த படம். இயக்குநர் அருண்குமார் என்ன மாதிரியான ஒரு அற்புதமான கலையை உருவாக்கி இருக்கிறீர்கள். ஒரு அற்புதமான படத்தை கொடுத்த படக்குழுடிவிற்கு எனது மனமார்ந்த பாராட்டு என தெரிவித்துள்ளார்.