பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் வேறு ஒருவரை தேர்வு செய்து அவரின் பயணத்தை விவரிக்க வேண்டும் என புது விஷயத்தை சொல்லியிருக்கிறார் பிக் பாஸ்.

இதையடுத்து பூர்ணிமா விஷ்ணு விஜய் பற்றி பேசினார். அவர் கூறியதாவது, என்ன வேண்டுமானாலும் செய்து ஒரு விஷயத்தை நீங்கள் அடைவீர்கள் என்பது தெளிவாக தெரிந்தது. நம்புங்க அவர் கண் கலங்கி அழுதார். இந்த வீட்டிலேயே அதிக அளவில் உங்களால் யூஸ் பண்ணப் பட்டது நான். என்னை கசக்கி தூக்கிப் போட்டுட்டீங்க என்றார்.

பூர்ணிமா சொன்னதை கேட்ட விஷ்ணு விஜய் கடுப்பாகி, எல்லோரையும் யூஸ் பண்ணி வீசியது நீ என்றார். அதை கேட்ட மாயாவோ, பாயிண்ட்ஸ் எல்லாம் வேஸ்ட் பண்ணாதீங்க விஷ்ணு என்று சொல்ல அவர் மேலும் கடுப்பாகி, உன்னிடம் என்ன பாயிண்ட்ஸ், நீ ஜீரோனு சொன்னார்.

விஷ்ணுவும், பூர்ணிமாவும் மோதிக் கொண்ட வீடியோவை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் கூறியிருப்பதாவது, விஷ்ணுவை பற்றி பூர்ணிமா சொன்னதில் தவறு இல்லை. யாரை வேண்டுமானாலும் யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போடும் பச்சோந்தி தான் விஷ்ணு. விஷ்ணுவால் டைட்டிலை வெல்ல முடியாது என தெரிவித்துள்ளனர்.