தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்சூர்யா. இந்த படத்தில் அவருடன் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியாவுடன் இணைந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், விரைவில் இந்தப்பட சூட்டிங்கில் சூர்யாவும் இணையவுள்ளார்.

இதனிடையே விரைவில் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது விடுதலை 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன். இதையடுத்து வாடிவாசல் படம் உருவாகும் என்றும் அதில் எந்த மாற்றமுமில்லை என்றும் தற்போது வெற்றிமாறன் தரப்பு உறுதி தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ள நடிகர்களிலும் எந்த மாற்றமுமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் கதை சூர்யாவை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக அவருக்கு பிரத்யேகமாக பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தில்தான் வெற்றிமாறன் இணையவுள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதலை 2 படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அஜித்துடன் இணையவுள்ளதாகவும் வாடிவாசல் படம் கேள்விக்குறியாகியுள்ளதாக முன்னதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.