ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் போது, உலகின் எந்த மூலையும் அதன் எல்லைக்குள் இருப்பது போல் உணர வைக்க அந்நாட்டில் இயங்கும் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் விமான நிறுவனங்கள் இந்த 'ஒன் பேக்கேஜ் பாலிசி' யை கொண்டு வந்துள்ளன.

இதன்மூலம் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே உள்ள நாட்டின் சிறந்த விமான நிறுவனங்கள் முக்கிய வணிக மற்றும் விடுமுறை இடங்களிலுள்ள விமான நிறுவனங்களுடன் இணைந்து உலகப் பயணத்தை மிகவும் எளிதாக்கியுள்ளன.

எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் மற்ற சர்வதேச விமான நிறுவனங்களுடனான கூட்டணியில், துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து பயணிப்பவர்கள் ஒரே ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்வதன் மூலம் பல்வேறு நகரங்களுக்கு எந்த இடையூறும் இல்லாத விமான பயணத்தை அனுபவிக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, இரண்டு விமான நிறுவனங்களும் பிலிப்பைன் ஏர்லைன்ஸுடன் (பிஏஎல்) ஒப்பந்தம் செய்துள்ளதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் பயணிகள் தென்கிழக்கு ஆசிய நாட்டின் சர்வதேச விமான நிலையங்களில் தரையிறங்கலாம்.

பின்னர் பிஏஎல் விமானங்கள் மூலம் உள்நாட்டு டெஸ்டினேஷனுக்கு மற்றொரு விமானத்தின் மூலம் செல்லலாம். இதை 'ஒரே பேக்கேஜ்' பாலிஸியின் படி முன்பதிவு செய்து பயணிகள் பெற்றுக்கொள்ளலாம்.

முன்பெல்லாம் பயணிகள் தங்களின் சர்வதேச விமான பயணத்தை முன்பதிவு செய்ய வேண்டும், பின்னர் உள்நாட்டு விமானத்திற்கு மற்றொரு விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த ஒன் பேக்கேஜ் பாலிசி மூலம் பயணிகள் அத்தனை வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

குறிப்பாக 'ஒன் பேக்கேஜ் பாலிசி' மூலம், பயணிகளின் செக்-இன் லக்கேஜ்களும் நேரடியாக அவர்கள் சென்று சேர வேண்டிய இடங்களுக்கு அனுப்பப்படும். இந்த சேவையில் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஆகியவை டஜன் கணக்கான விமான நிறுவனங்களுடன் இன்டர்லைன் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன, இதனால் பயணிகள் ஒரே டிக்கெட்டில் உலகம் முழுவதும் பயணம் செய்ய முடியும்.