இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' என்ற மேற்கொள்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலை நடைபயணம் தான் மேற்கொள்கிறார் என்றாலும் ஒரு பிரத்யேக கேரவன் ஒன்றும் தயார்செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் மெத்தை படுக்கை , ஏசி, மைக்ரோவேவ் உள்ளிட்ட  பல நவீன வசதிகளுடன் இந்த கேரவனின் உட்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து அண்ணாமலைக்காக பிரத்யேகமாகதயார் செய்யப்பட்ட இந்த கேரவன் குறித்து காயத்ரி ரகுராம் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- ஒரு தலைவராக உங்கள் சொந்த பலத்தை காட்ட முடியாது, பாஜக வளர்ச்சியை காட்ட முடியாது, மாறாக மற்ற கட்சி தலைவர்களை உங்கள் பாவ யாத்திரைக்கு அழைக்கிறீர்களா?

விளம்பரம் மட்டுமே முக்கியம். உங்கள் பணியாளர்கள் வெப்பத்திலும் மழையிலும் பாதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். காரியகர்த்தாக்கள் தள்ளு இழுத்தல், பாறைகள் மற்றும் சேற்றில் எல்லா முயற்சிகளிலும் நடக்க வேண்டும். ஆனால் ஓய்வெடுக்க உங்களுக்கு சொகுசு கேரவன் வேண்டுமா? என் மக்கள் என் மண் என்கிறீர்கள் ஆனால் 2024ல் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக உங்கள் யாத்திரை என்று சொல்கிறீர்கள். ஆனால் மணிப்பூர், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் மக்களின் பிரச்சனை என்று வரும்போது, விளம்பரம் மட்டுமே முக்கியம். ஏன் இரட்டை நிலை? இறுதியாக இது பாவ யாத்திரை, இது பாத யாத்திரை அல்ல என்று நிரூபிக்கப்பட்டது. இந்த யாத்திரை தமிழ் மக்களுக்காகவோ அல்லது நம் நாட்டிற்காகவோ அல்ல, இது விளம்பர யாத்திரை. இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.