இந்தியா: தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை தமிழ்நாடு நடத்தியது.

இந்த போட்டிகளில் மொத்தம் 187 நாடுகளின் 1,400 வீரர்கள் பங்கேற்றனர். ஏறத்தாழ இரண்டு வார காலமாக இந்த போட்டிகள் நடைபெற்றன.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. பங்கேற்க வந்த வெளிநாட்டு வீரர்கள் கூட தமிழகத்தின் விருந்தோம்பலை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது' வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது' விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் இந்த விருதை வழங்கினார்.