இந்தியா: தமிழ்நாடு

லோக்சபா தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் இந்த பாதயாத்திரை தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். பாஜகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை தொடக்க விழாவில் பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பதே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

"என் மண் என் மக்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து அண்ணாமலையின் இந்த யாத்திரை தொடங்குகிறது. கோவையில் திமுகவினர் இந்த யாத்திரை முழக்கத்துக்கு பதிலடி கொடுத்து போஸ்டர்களை ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் பல இடங்களில் திமுகவினர் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி படங்களுடன் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

அதில் " இது என்னோட மண்.. ஒரு பிடிமண்ணக் கூட எடுக்க முடியாது" என்கிற காலா பட வசனமும் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

திமுகவினரிடன் இந்த போஸ்டர் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே திமுக மாணவர் அணித் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பெயரில் ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், பற்றி எரியும் மண் உங்கள் மண் இல்லையா? நிர்வாணமாக்கப்படும் பெண்கள் உங்கள் மக்கள் இல்லையா? பதில் சொல்லுங்க Mr. Ex- officer அண்ணாமலை!!! என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.