இந்தியா: தமிழ்நாடு

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் அண்ணாமலை பாஜகவை தயார் படுத்தி வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து எதிர்வரும் 28 ஆம் திகதி தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

இதனிடையே அண்ணாமலை ராஜ்யசபா எம்.பியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- அவர் ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் வரப் போகிறார் என்று அவரது வார்ரூம் ஒரு பொய்யான செய்தியை பரப்பியது (அவரது நீண்ட கால ஆசை), அவர் பாஜகவில் சேர்ந்ததற்கு முழு காரணம் இது மட்டுமே, எந்த வேலையும் செய்யாமல், சேவையும் செய்யாமல் (அவர் எப்படி தனது போலீஸ் வேலை: தேச பக்தி சேவையை முடிக்காமல் பாதி வழியில் விட்டுவிட்டார் என்பது போல) மக்கள் சேவை பிம்பம் மட்டுமே.

அதன் பிறகு அதே வார்ரூம் அது பொய்யான செய்தி என்று ஒரு செய்தியை பரப்பியது. ஏனென்றால் அண்ணாமலைக்கு டெல்லி அரசியல் மத்தியில் அவர் தொல்லை இருக்கும் என்று பாஜகவுக்கு தெரியும், அவரால் தமிழக எம்பி சீட் வெல்ல முடியாது என்பது தெரியும் (இது பீதி) . * இப்போது அவர் இல்லாமல் தமிழக பாஜக மூழ்கிவிடும். தமிழக பாஜகவுக்கு அவர் தேவை என்கிறார்கள் (வெட்டி விளம்பரம்). பின்னர் அவர் பாவ யாத்திரை செய்வார் (அது விளம்பரத்திற்கான அவரது சேவை)" என்று சாடியுள்ளார்