ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்யாவின் கீழ் உள்ள தாகெஸ்தான் குடியரசுக்கு சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவரை பார்க்க டெர்பென்ட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி ரைசாட் அகிபோவா காத்திருந்தார். ஆனால் அவரால் புதினை பார்க்க முடியவில்லை. இதையடுத்து அந்த சிறுமி கதறி அழுதார்.

இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அந்த சிறுமியை பார்க்க விளாடிமிர் புதின் முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு அந்த 8 வயது சிறுமி ரைசாட் அகிபோவா வருகை தந்துள்ளார். அதிபர் மாளிகையில் விளாடிமிர் புதினை பார்த்தவுன் சிறுமி சிரித்த முகத்துடன் வேகமாக ஓடிச்சென்று அவரை கட்டியணைத்தார்.

இதையடுத்து புதின், சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து சிறுமியிடம் புதின் பேசிக்கொண்டிருந்தார். அதன்பிறகு திடீரென நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவுக்கு புதின் போன் போட்டு பேசினார். அப்போது, ரைசாட் அகிபோவா வசிக்கும் தாகெஸ்தான் குடியிருப்புக்கான திட்ட மானியம் வழங்கும்படி கூறினார். மேலும் சிறுமியையும் நிதி அமைசசர் அன்டர் சிலுவோனாவிடம் பேச வைத்தார். அதோடு கூடுதல் நிதி கேட்கவும் கோரினார். சிறுமியும் மழலை மொழியில் கேட்டார். இதையடுத்து கூடுதல் நிதியுதவி வழங்கவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதன்மூலம் தாகெஸ்தான் குடியரசுக்கு 5 பில்லியன் ரூபிள் (ரஷ்யா பணம்) வரை கிடைத்துள்ளது. இந்நிலையில் விளாடிமிர் புதினை பார்க்க முடியாத வருத்தத்தில் 8 வயது சிறுமி கதறி அழுதது, அதன்பிறகு சிறுமி விளாடிமிர் புதினை சந்தித்தது, புதின் அவர்களை வரவேற்றது, சிறுமி, புதினை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தியது, இருவரும் நிதி அமைச்சரிடம் உரையாடியது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.