உலக அளவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக அதிக வெப்பமான நாளாக கடந்த ஜூலை 3 ஆம் பதிவாகியுள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் கணிப்புக்கான அமெரிக்க தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 3 ஆம் திகதி சராசரி உலக வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் அளவை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது.

அதுதான் உலகின் மிக அதிக தகிக்கும் வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அதை விட அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது.

அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவுகிறது. கடந்த 3 ஆம் திகதி அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் வெப்பநிலை 46 டிகிரியை எட்டியது. தெற்கு டெக்சாசில் அதிகபட்சமாக சமீபத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

வட ஆப்பிரிக்காவில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.