பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் 7,8,9 ஜூலை 2023 ஆகிய தேதிகளில் சென்னையில்  நடைபெறுகிறது அதில் புலவர் ஆ.காளியப்பன் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் தலைவராகிய நான் சிறப்புப் பார்வையாளனாகக் கலந்து கொள்கிறேன். அதுசமயம் வெளிநாடு வாழும் அறிஞர்களின் தொடர்பைப் பெற வாய்ப்பு உள்ளது. அதனால் தொல்காப்பிய மன்றத்தைப் பற்றி உலகறியச் செய்ய முடியும்  அனைவரின் வாழ்த்துகளை வேண்டுகிறேன்.
மாநாட்டின் மையப்பொருள்

1 தமிழினம், தமிழ்மொழி,இலக்கியம், தமிழர் பண்பாடு, நாகரிகம் இவற்றை மீட்டுருவாக்கம் செய்தல்
2. தொல்லியல், மரபணுவியல், மொழியியல்,இலக்கிய வரலாறு, பண்பாட்டு வரலாறு, அகழ்வாய்வு, இத்துறைகளில் நமக்குக்கிடைத்துள்ள புதிய ஆய்வு முடிவுகள் பற்றியது.
3 இவைபற்றி உலகின் பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகள் 200 வாசிக்கப்படுகின்றன.
4. 20 நாடுகளைச் சேர்ந்த பேராளர்களின் கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன
5.கலை நிகழ்ச்சிகள்,சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
6.பலநூல்கள் வெளியிடப்படுகின்றன
இம்மாநாடு சென்னை செம்மஞ்சேரி ஆசியவியல் நிறவனத்தில் நடைபெறுகிறது தொடர்பு எண் 9840526834

செய்தியாளர்: சி. தாமோதரன்