தைவானில் நுவு மா குயே என்ற ஹோட்டலில் ஒரு உணவிற்காக நிறைய கூட்டம் அலைமோதுகிறதாம்.

இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நூடுல்ஸ் நிரம்பிய கோப்பை ஒன்றில் வறுத்த முதலையின் கால் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த டிஷ் அங்குள்ள இளம் பெண்ணுக்கு பரிமாறப்படுகிறது.

அதை அவர் ருசித்து சாப்பிடுகிறார். முதலையின் கால்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அந்த உணவுக்கு காட்ஜில்லா ராமென் என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ 3,900. இதற்காக டைட்டூன் மாகாணத்தில் இருக்கும் ஒரு முதலை பண்ணையில் இருந்து முதலைகளை வாங்குவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் முதலைக் கறி உணவுக்கு தைவானில் நல்ல வரவேற்பு உள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்