இந்தியா: தமிழ்நாடு

வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், சோனியா காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். உங்கள் சந்ததிகள் முன்னேற்றத்திற்கும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டு விதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது என பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்தார்.

திமுக ஆரம்பத்தில் இருந்தே குடும்ப அரசியல்தான் செய்கிறது. அறிஞர் அண்ணா அனைவரும் 'தம்பி' என்று கூறினார். அதே போல தலைவராக இருந்த கருணாநிதி அனைவரும் உடன்பிறப்பே என்று அழைப்பார்.

கூட்டமோ, மாநாடோ, போராட்டமோ எதுவாக இருந்தாலும் மக்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக குடும்ப அரசியல் செய்வது உண்மைதான் அதே போல தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் குடும்பம்தான் என்றும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.