இந்தியா: தமிழ்நாடு

வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டு விதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது என பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் பாஜகவிற்கு எதிராக கட்சிகளை அழைத்து தேர்தல் வியூகம் அமைக்க முதற்கட்டமாக முயற்சி எடுத்து கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்.

அந்த அச்சம் காரணமாகவே பிரதமர் மோடி இறங்கி வந்து பேசியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களை பார்க்க பிரதமர் மோடி செல்லவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் எத்தனையே பிரச்சினைகள் இருக்கும் போது பொது சிவில் சட்டம் பற்றி பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்றும் முதல்வர் ஸ்டாலின் கேற்வி எழுப்பினார்.

மேலும் நாட்டிலே குழப்பத்தை ஏற்படுத்தி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.