இந்தியா: தமிழ்நாடு

பக்ரித் நாளில் தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி, மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என சசிகலா வாழ்த்தி இருக்கிறார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் அவர் கூறியிருப்பதாவது...

தியாகத்தை போற்றும் திருநாளாம் பக்ரீத் பெருநாளை கொண்டாடும் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "பக்ரீத் திருநாள்" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளத் தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளைப் பெற முடியும் என்கிற நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு துரோகங்கள் அழியட்டும், சகோதரத்துவமும், ஈகை குணமும் தழைத்தோங்கட்டும், தியாக சிந்தனைகள் மேலோங்கட்டும். மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்நாளில் உறுதியேற்போம்.

இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கிய நம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும், இஸ்லாமியர்கள் பயன் பெரும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அளித்து அவர்களின் தெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்பதை இந்நாளில் பெருமிதத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.

பக்ரித் அன்று முஸ்லிம்கள் கால்நடைகளை பலியிடுவது ஏன்? நரபலி ஒழித்த குர்பானி
இந்த சிறப்புக்குரிய நாளில் தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி, மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். இந்நாளில் இறைவனின் அருளை பெற சிறப்பு தொழுகை செய்து, அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, ஏழை எளியோருக்கு உணவளித்து, உற்றார் உறவினர்களுடன் ஒன்று கூடி உற்சாகத்தோடு கொண்டாடி மகிழும் அன்புள்ள இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.