நியூசிலாந்து அதிகாரிகள் பசிபிக் பெருங்கடலில் மிதந்து வந்த மூன்று டன்களுக்கும் அதிகமான 81 கொக்கைன் மூடைகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தேசிய தலைமையகத்தில் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.

குறித்த 81 மூட்டைகளில் மொத்தம் 3.2 டன்கள் கொக்கைன் போதைப்பொருள் இருந்ததாகவும் இவற்றின் தெரு மதிப்பு அரை பில்லியன் டாலர்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பொலீஸ் கமிஷனர் ஆண்ட்ரூ கோஸ்டர் கூறுகையில்...

இது பெரிய அளவிலான கப்பலில் ஆஸ்திரேலிய சந்தைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்.

இவை ஒரு வருடத்திற்கு ஆஸ்திரேலிய சந்தையில் விற்பனை செய்ய போதுமான கொக்கைன் என தெரிவித்தார்.

இந்த கண்டுபிடிப்பு இந்த தயாரிப்பின் விநியோகஸ்தர்களுக்கு ஒரு பெரிய நிதி அடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று கோஸ்டர் கூறினார்.

இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் சர்வதேச அளவில் விசாரணைகள் தொடர்கின்றன என அவர் தெரிவித்தார்.

இதனிடையே நியூசிலாந்து கஸ்டம்ஸ் சர்வீஸ் ஆக்டிங் கன்ட்ரோலர் பில் பெர்ரி, "நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பரந்த பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சமூகங்களுக்கு இவ்வளவு பெரிய அளவிலான கொக்கைன் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க உதவியதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.