ஆக்லாந்தின் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகளை அவசரகால மேலாண்மை  முடுக்கிவிட்டுள்ளது.

கவுன்சில் மற்றும் அதன் பார்ட்னர் ஏஜென்சிகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் குடியிருப்பாளர்களின் நலன் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சிலரால் தங்களுக்குத் தேவையான தகவல்களை அணுக முடியாமல் போகலாம் என்று அவசரநிலை மேலாண்மைக் கடமைக் கட்டுப்பாட்டாளர் ரேச்சல் கெல்லேஹர் கூறினார்.

இந்நிலையில் பல்வேறு மொழிகளில் நாங்கள் மொழிபெயர்த்துள்ள தகவல் உட்பட, சமூகத்திற்கு முக்கியமான தகவல்களை வழங்க பல்வேறு தகவல்தொடர்பு சேனல்களைப் பயன்படுத்துகிறோம் என அவர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு நடந்த அவசரநிலை மேலாண்மை மாநாட்டில், 261 வீடுகளில் இப்போது சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன என்றும், 1478 வீடுகளில் மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என்றும் கெல்லேஹர் கூறினார்.

ஆக்லாந்து பகுதியில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மாசுபாட்டிருக்க கூடிய சாத்தியம் இருப்பதால் Kaipara துறைமுகம் உட்பட இன்னும் பல கடற்கரைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆக்லாந்தின் Onehunga வில் கடந்த வார வெள்ளத்தின் பாதிப்புகளைச் சமாளிக்க உள்ளூர் வாரிய உறுப்பினர்கள் சமூக மையத்தை அமைத்துள்ளார்.

Maungakieie - Tamaki லோக்கல் போர்டின் துணைத் தலைவர் டெப்பி பர்ரோஸ் கூறுகையில், இந்த மையமானது சமூகத்திற்குள் நுழைந்து அவர்களின் தேவைகளை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துகிறது என தெரிவித்தார்.