நாட்டிற்கு வருகின்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், முச்சக்கர வண்டி சாரதிகளால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

வௌிநாட்டவர்களின் பாதுகாப்பிற்காக சுற்றுலா பொலிஸாருடன் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.