ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையுமே அங்கீகரித்துள்ளது.

இருவரும் இணைந்து கையெழுத்து போட்டால்தால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளதால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தைப் பெற எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக முயன்று வருகிறது.

அதேநேரம், இரட்டை இலை கிடைக்காவிட்டால் என்ன சின்னம் பெறுவது என்ற ஆலோசனையிலும் எடப்பாடி தரப்பினர் இறங்கியுள்ளனர்.

இதன்படி, புல்லட் சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி, தனக்கு நெருக்கமான ஆதரவாளர்கள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறார். அப்போது இடைத்தேர்தல் சின்னம் பற்றியும் ஆலோசித்துள்ளனர்.

அதன்படி புல்லட் சின்னம் பெறலாம் என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பில் முறையிட ஈபிஎஸ் தரப்பு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.