பசிபிக் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் நியூசிலாந்தின் முதல் துணைப் பிரதமராக பதவியேற்க உள்ளது ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று பசிபிக் சமூகத்தில் உள்ள தலைவர்கள் நம்புகிறார்கள்.

பொதுத் தேர்தலுக்கு ஒன்பது மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் பதவி விலகலை அடுத்து அவரது இடத்திற்கு வரவுள்ள பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் நேற்று கார்மல் செபுலோனியை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்.

அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தின் டோங்கன் சமூகத்தை சேர்ந்த முதல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றை படைத்தவர் ஆவார்.

நியூசிலாந்து Methodist தேவாலயத்தின் மரியாதைக்குரிய செடைடா வெய்குனே அவர்கள், மார்னிங் ரிப்போர்ட்டிடம் கூறுகையில்...

கெல்ஸ்டன் இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக சிறுவர்களுக்கு ஒரு உத்வேகமாக இருப்பார் என்று கூறினார்.

"நாம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டு மற்றும் எங்கள் மக்களுக்கு, வானமே எல்லை என்று இன்று நிரூபணமானது" என்று அவர் கூறினார்.

பசிபிக் சமூகத் தலைவர் சர் கொலின் டுகுயிடோங்கா,இது அவர்களின் சமூகத்திற்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு வரலாற்று தருணம் என்று கூறினார்.

தற்போது சமூக மேம்பாடு, ACC மற்றும் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இலாகாக்களை வைத்திருக்கும் செபுலோனி - பசிஃபிக் சமூகத்தை தன்னுடன் முன்னோக்கி கொண்டு வர வேலை செய்வார் என்று வெய்குனே நம்புவதாக தெரிவித்தார்.