சீன முயல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆக்லாந்தில் களைகட்ட ஆரம்பித்துள்ளன.

சீனாவில் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு புத்தாண்டு கொண்டாடப்படுவதோடு, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்குகளின் பெயரில் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

அதன்படி இம்முறை முயல் புத்தாண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஆக்லாந்து ஸ்கை டவரில் நூற்றுக்கணக்கான மக்கள் சிங்க நடனம் மற்றும், கலாச்சார நிகழ்ச்சிகளை காண கூடியிருந்தனர்.

ஆக்லாந்தர்களை பொறுத்தவரை இந்த விழாக்கள் அடுத்த மாதம் விளக்கு திருவிழாவுடன் முடிவடையும்.

மேலும் இது பெப்ரவரி 2 முதல் பெப்ரவரி 5 ஆம் திகதி வரை Manukau Sports Bowl இல் கொண்டாடப்படும்.