இயக்குனர் சசி இயக்கியிருந்த பிச்சைக்காரன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருந்தார்.

2016இல் வெளியாகி தமிழ், தெலுங்கு என சூப்பர் ஹிட்டான படம் பிச்சைக்காரன்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்துள்ளார்.

சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிச்சைக்காரன் 2 படத்தின் முன்னோட்டம் கடந்த சில மாதங்கள் முன்பு வெளியாகி பாராட்டுகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.