நடிகை மம்தா மோகன்தாஸ் 2005 இல் ஹரிஹரன் இயக்கிய மயோக்கம் என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார்.

மம்தா ஒரு பின்னணிப் பாடகியும் கூட. மலையாள சினிமாவில் பணியாற்றிய பிறகு தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் சிவப்பதிகாரம், தடையற தாக்க, குசேலன்,குரு என் ஆளு,ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் மம்தா மோகன்தாசுக்கு விட்டிலிகோ என்ற 'ஆட்டோ இம்யூன்' நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மம்தா ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது...

"நான் என் நிறத்தை இழக்கிறேன்.. தினமும் காலையில் நான் எழுகிறேன், உங்கள் முதல் சூரிய கதிர் என்னை எழுப்புகிறது,"

"சூரியன் உன்னிடம் உள்ள அனைத்தையும் எனக்குக் கொடு.. உன் அருளுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

விட்டிலிகோ என்பது தோலின் நிறத்தை இழக்கச்செய்யும் சரும நோய் ஆகும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டால் தோல் நிறம் இழக்கும். கை, கால், உதடு, முடி என உடலின் எந்த பாகத்திலும் இந்த நோயால் நிறம் இழக்கலாம்.

உடலில் ஆங்காங்கே நிறமிழந்து திட்டுகள் உருவாகும்.

மேலும் விட்டிலிகோ நோய்க்கு சிகிச்சை இல்லை என்றாலும் நிற மாற்றத்தை குறைக்க சிகிச்சைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.