வருமான வரித்துறை சார்பில் இளம் தொழிலதிபர்களுக்கான விருது விழா கோவையில் நடைபெற்றது.

இதில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்..

வாரிசு படம் வெளியான பிறகு தான் தளபதியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தோம்.

இனி 10 நாட்கள் கழித்து படம் தொடர்பான அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகும்.

பொதுவாக படம் பார்க்க வரும்போது, ரசிகர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இது வெறும் சினிமா தான். உயிரை விடும் அளவிற்கு சினிமாவில் ஒன்றும் இல்லை.

ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பவேண்டும் என்பதே என்னுடைய கருத்து என அவர் தெரிவித்தார்.